/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் குப்பையில் வீசப்பட்ட காலாவதி கூல்டிரிங்ஸ் பாட்டில்கள் உறங்கும் உணவு பாதுகாப்புத் துறை

ADDED : செப் 04, 2024 01:01 AM

பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கால்வாய் ரோட்டோரம் காலாவதியான ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூல்டிரிங்ஸ் பாட்டில்கள் குப்பையில் வீசப்பட்ட நிலையில் உணவு பாதுகாப்பு துறையோ உறக்கத்தில் உள்ளது.
பரமக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை மையமாக வைத்து தினமும் பல ஆயிரம் கூல்டிரிங்க்ஸ் பாட்டில்கள் விற்பனை ஆகிறது. இதன்படி குடிநீர் பாட்டில் முதல் பல்வேறு வகையான கோலி சோடா மற்றும் பாதாம் பால் என ஏராளமான பாட்டில்கள் விற்பனையாகிறது.
ரூ.10 முதல் 40 விலை கொண்ட ஏராளமான பாட்டில்கள் காலாவதியானதால் இவற்றை முறையாக அழிக்காமல் பல்வேறு நிறுவனங்களில் இருந்து பேக்கிங் செய்யப்பட்ட பாட்டில்களை குப்பையில் வீசிச் சென்றுள்ளனர்.
பரமக்குடி வேந்தோணி கால்வாய் ரோட்டோரம் பல ஆயிரம் பாட்டில்கள் குப்பையில் கிடந்தன. இவற்றை பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை சேகரித்து விற்பனை செய்வோர் கண்டறிந்து கொண்டு சென்றனர்.
இது போன்ற பாட்டில்களை விவரம் அறியாதவர்களோ அல்லது பள்ளி மாணவர்கள் குடிக்க நேர்ந்தால் விபரீதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே காலாவதியாகும் பொருட்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்டறிந்து அவ்வப்போது ரெய்டு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.