/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விலை வீழ்ச்சி; 62 கிலோ மூடை ரூ.1250க்கு விற்கும் அவலம்
/
ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விலை வீழ்ச்சி; 62 கிலோ மூடை ரூ.1250க்கு விற்கும் அவலம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விலை வீழ்ச்சி; 62 கிலோ மூடை ரூ.1250க்கு விற்கும் அவலம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விலை வீழ்ச்சி; 62 கிலோ மூடை ரூ.1250க்கு விற்கும் அவலம்
ADDED : பிப் 23, 2025 06:34 AM

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் மாவட்டத்தில் சம்பா பருவ நெல் விளைச்சல் அதிகரித்திருந்தாலும் விலை வீழ்ச்சியடைந்து 62 கிலோ மூடை கடந்த ஆண்டில் ரூ.1650க்கு விற்றது தற்போது ரூ.1250க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 1.37 லட்சம் எக்டேரில் விவசாயிகள் நெல் பயிரிட்டிருந்தனர். இந் நிலையில் நெல் விளைச்சலுக்கு போதுமான தண்ணீர் வசதியிருந்தும் நெல் விளைச்சலுக்கு பிறகு பருவம் தப்பி பெய்த மழையால் நெற்பயிர்கள் சேதமடைந்தன. விளைந்த பயிர்கள் மீண்டும் முளைக்க ஆரம்பித்தன.
இத்தனை இடையூறுகளை கடந்தும் நெற்பயிர்கள் விளைச்சல் அதிகரித்தது. அதிக விளைச்சல் இருந்தும் நெல் விலை குறைந்துள்ளது. பி.பி.டி(டீலக்ஸ் பொன்னி) ரகம் 62 கிலோ மூடை ரூ.1200 முதல் 1250க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு 1.27 லட்சம் எக்டேரில் நெல் பயிரிட்டிருந்தனர். தண்ணீர் பற்றாக்குறையால் விளைச்சல் குறைந்தது. இதனால் 62 கிலோ மூடை ரூ.1650க்கு விற்பனையானது. இதனால் கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைத்தது.
இந்த ஆண்டு நெல் விளைச்சல் இருந்தும் விலை இல்லாமல் வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் பாக்கியநாதன் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விளைச்சல் அதிகமாக இருந்தாலும் ஈரப்பதம் அதிகமாக இருந்ததாலும், நெல் உறுதித்தன்மை இல்லாமல் இருந்ததாலும் கிலோ ரூ.20க்கு விற்பனையானது. கடந்த ஆண்டு போதுமான விளைச்சல் இல்லாவிட்டாலும் கிலோ ரூ.27 க்கு விற்பனையானது. இந்த ஆண்டு விலை குறைவால் போதுமான லாபம் கிடைக்கவில்லை. விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவிட்டுள்ள நிலையில் நஷ்டம் தான் ஏற்பட்டுள்ளது என்றார். ----------

