/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கள் விற்க அனுமதி வேண்டும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
/
கள் விற்க அனுமதி வேண்டும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 29, 2024 06:06 AM

ராமநாதபுரம், : ராமநாதபும் மாவட்ட காவிரி-வைகை-கிருதுமால்-குண்டாறு இணைப்புக் கால்வாய் நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் பனங்கள் இறக்க அரசு அனுமதி வழங்க கோரி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் மலைச்சாமி தலைமை வகித்தார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 64 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பனங்கள், பதநீர் இறக்குபவர்கள் மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்கின்றனர்.
பனைத் தொழிலாளர்களை தொந்தரவு செய்கின்றனர். அதனை கைவிட்டு தமிழகத்தில் பனங்கள் இறக்க அரசு ஆணையிட வேண்டும் என கோஷமிட்டனர்.
அதன் பிறகு கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். கமுதி, சிக்கல், பரமக்குடி, முதுகுளத்துார் விவசாயிகள் பங்கேற்றனர்.

