/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நீரில் மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம் கொடுங்க; கண்மாய் வரத்து கால்களை துார்வார வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்
/
நீரில் மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம் கொடுங்க; கண்மாய் வரத்து கால்களை துார்வார வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்
நீரில் மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம் கொடுங்க; கண்மாய் வரத்து கால்களை துார்வார வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்
நீரில் மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம் கொடுங்க; கண்மாய் வரத்து கால்களை துார்வார வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : பிப் 22, 2025 10:42 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, கமுதியில் பெயரளவில் வேளாண் விற்பனை கூடங்கள் செயல்படுகிறது. மழைநீரில் பயிர்கள் மூழ்கி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம், காப்பீடு இழப்பீடுவழங்க வேண்டும். கண்மாய், நீர்வரத்து கால்வாய்களை துார்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத்சிங் காலோன் தலைமை வகித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, மாவட்ட வன அலுவலர் ேஹமலதா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர்(பொ) ராஜலட்சுமி, வேளாண் இணை இயக்குநர் மோகன்ராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாஸ்கரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாலகிருஷ்ணன், சோழந்துார்: கடலில் கலக்கும் உபரிநீரை சேமிக்க வேண்டும். மாவட்டத்தில் அனைத்து கண்மாய், நீர்வரத்து கால்வாய்களை துார்வார வேண்டும். ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் மூலம் 80க்கும் மேற்பட்ட கண்மாய்கள் பாசன வசதி பெறுகின்றன. இக்கண்மாயை அணைக்கட்டாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலெக்டர்: உங்களது கோரிக்கையை மனுவாக தாருங்கள் அரசிற்கு பரிந்துரை செய்கிறேன்.
நாகரத்தினம், புதுக்குடி: வேளாண் விற்பனை கூடங்களில் கடைகள் ஏலம் விட்டனர். அதில் விவசாயிகள் அல்லாதவர்களுக்கு விற்றுள்ளனர். வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.
கலெக்டர்: இதுகுறித்து வேளாண் விற்பனைச் செயலாளர் விசாரித்து அறிக்கை தர வேண்டும். விவசாயிகள் பொருட்களை இருப்பு வைத்து விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல் கொள்முதல் நிலையங்கள் மாவட்டத்தில் சில இடங்களில் மட்டுமே செயல்படுகிறது என்றார்.
அப்போது சில விவசாயிகள் எழுந்து கடந்த ஆண்டு சாக்குப்பை பற்றாக்குறையாக உள்ளது. மூடைக்கு ரூ.10க்கு பதிலாக ரூ.50 வரை கேட்கின்றனர் என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
மெர்லின் டாரதி, நுகர்பொருள் வாணிப கழகம் பொதுமேலாளர்: சாக்கு பைகள் ஒரிரு நாட்களில் வந்துவிடும். கூடுதல் வசூல் குறித்து எழுத்துப்பூர்வமாக புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
பாஸ்கரபத்மநாபன், பரமக்குடி: விவசாய நிலத்தை மான்கள் சேதப்படுத்தி விட்டது. கலெக்டரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
நீதிமன்றத்திற்கு செல்ல கூறுவதில் நியாயம் இல்லை. எனது விவசாய நிலத்தை விற்பனை நிலமாக மாற்றி வழங்க வேண்டும்.
கலெக்டர்: உங்களது கோரிக்கை தொடர்பாக மாவட்ட வன அலுவலரிடம் தெரிவித்துள்ளேன். அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் இழப்பீடு வழங்கப்படும். அதில் திருப்தியில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுங்கள்.
தொடர்ந்து ஒன்றியங்கள் வாரியாக விவசாயிகள் பேசினர். நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. அதிகாரிகள் விரைவில் கணக்கெடுப்பை முடித்து நிவாரணம் வழங்க வேண்டும். புகார் மனுக்கள் மீது சரியான பதில் வருவதில்லை.
கூட்டுறவு வங்கியில் பயிர்கடன் தள்ளுபடி ரசீது விரைவில் வழங்க வேண்டும்.
மான், காட்டுபன்றிகளால் பரமக்குடி, கமுதி என மாவட்டத்தில் பல இடங்களில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என விவசாயிகள் பேசினர்.
நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.சேதமடைந்த கால்வாய்கள் சீரமைக்கப்படும். விவசாயிகள் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறையினர் ஒரு மாதத்திற்குள் பதில் அளிக்க வேண்டும்.
விவசாயிகள், குறைகள், கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கூறினார்.