/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மோட்டார் வைத்து பருத்திக்கு தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்
/
மோட்டார் வைத்து பருத்திக்கு தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்
மோட்டார் வைத்து பருத்திக்கு தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்
மோட்டார் வைத்து பருத்திக்கு தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்
ADDED : மார் 28, 2024 05:57 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கண்மாய் தண்ணீரை மோட்டார் வைத்து பருத்தி செடிகளுக்கு பாய்ச்சி வருகின்றனர்.
முதுகுளத்துார் வட்டாரத்தில் கிராமங்களில் மானாவாரியாக நெல் விவசாயம் செய்து வந்தனர். கடந்தாண்டு பெய்த பலத்த மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது. நெல் விவசாயம் முழுவதும் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
வேறு வழியின்றி நெல் விவசாயத்தை அழித்துவிட்டு மிளகாய், பருத்தி விவசாயம் செய்துள்ளனர். முதுகுளத்துார் அருகே காத்தாகுளம், காக்கூர், புளியங்குடி, வெண்ணீர்வாய்க்கால், கீழத்துாவல் ஏனாதி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் பருத்தி விவசாயம் செய்துள்ளனர்.
தற்போது பருத்தி செடிகளுக்கு போதுமான தண்ணீர் இல்லாததால் வாடியது. கடந்தாண்டு பருவமழை காலத்தில் பெய்த மழை நீரை கண்மாய் மற்றும் ஊருணிகளில் தேக்கி வைத்திருந்தனர். தற்போது கூடுதல் பணம் செலவு செய்து மோட்டார் வைத்து பருத்திச் செடிகளுக்கு கண்மாய்களில் இருந்து தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.
நிலத்தை தரிசாக விடக்கூடாது என்பதற்காக கூடுதல் பணம் செலவு செய்து விவசாயம் செய்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.