ADDED : ஜூன் 06, 2026 05:41 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை சமத்துவபுரம் அருகே புதர்கள் அடர்ந்த பகுதியில் சிலர் தீ வைத்தனர்.
பலத்த காற்றில் தீ அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு பரவும் நிலை ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறைக்கு தெரிவித்தனர். நிலைய அலுவலர் முருகானந்தம் மற்றும் வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். இதனால் குடியிருப்பு பகுதிக்குள் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
