ADDED : செப் 14, 2024 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி : தொண்டியில் சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தொண்டி ஏ.வி.கே.மருத்துவமனை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு திருவாடானை டி.எஸ்.பி., சீனிவாசன் தலைமை வகித்தார். ஐக்கிய ஜமாத் தலைவர் ஹிப்பத்துல்லா, த.மு.மு.க., மாநில செயலாளர் சாதிக்பாட்ஷா உட்பட பலர் கலந்து கொண்டனர். டாக்டர் சேகர் நன்றி கூறினார்.
ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு முதலுதவி பெட்டி மற்றும் முதலுதவிபுத்தகம் வழங்கப்பட்டது.