ADDED : ஆக 25, 2024 10:46 PM
ராமநாதபுரம்: -செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி முகாம் நடந்தது. கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம், யூத் ரெட்கிராஸ், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி இணைந்து மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது.
முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் வள்ளிவிநாயகம் வரவேற்றார். இந்தியன் ரெட்கிராஸ் மாவட்டத்தலைவர் சுந்தரம் முதலுதவியின் முக்கியத்துவம் பற்றி பேசினார்.
முதலுதவி பயிற்சியாளர்கள் அலெக்ஸ், சொக்கநாதன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
விஷக்கடி, எலும்பு முறிவு ஏற்பட்டவர்களை காப்பாற்றுவது பற்றியும், இதய அடைப்புக்கு எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என விளக்கினர். கல்லுாரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா, செய்யது அம்மாள் அறக்கட்டளை டாக்டர் பாத்திமா சானஸ் பரூக் பேசினர். நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் அருணாதேவி நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, மேற்பார்வையாளர் சபியுல்லா செய்திருந்தனர்.