/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேசிய நெடுஞ்சாலைகளில் பறக்கும் படையினர் தவிப்பு
/
தேசிய நெடுஞ்சாலைகளில் பறக்கும் படையினர் தவிப்பு
ADDED : மார் 28, 2024 06:21 AM
திருவாடானை: தேசிய நெடுஞ்சாலைகளில் சீறிப்பாயும் வாகனங்களை சோதனை செய்ய முடியாமல் பறக்கும் படை அலுவலர்கள் தவிக்கின்றனர்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்.19ல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு வந்த அன்றே நிலையான கண்காணிப்பு குழு, பறக்கும் படை என குழு உருவாக்கப்பட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருள் கொடுப்பதை தடுக்க சோதனை செய்யப்படுகிறது.
திருவாடானை சட்டசபைக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்த சோதனையில் ஸ்டாலின், உதயநிதி படம் போட்ட பனியன்களும் பல லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலை மற்றும் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலைகளில் போலீசார் ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்வதற்குள் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வேகமாக கடந்து செல்கின்றன. இதனால் அலுவலர்கள் சோதனையை முறையாக செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர். மக்கள் கூறியதாவது:
ஒவ்வொரு குழுவிற்கும் கூடுதலாக போலீசாரை நியமித்து சோதனையை துரிதப்படுத்த வேண்டும். ஓட்டுப்பதிவிற்கு முன் நடவடிக்கை எடுத்தால் தான் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் எடுத்துச் செல்வதை தடுக்க முடியும் என்றனர்.