ADDED : ஜூலை 01, 2025 12:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை:
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சொத்துத்தகராறில் மனைவியை கொலை செய்த கணவர் போலீசில் சரணடைந்தார். திருவாடானை அருகே சித்தம்பூரணி கிராமத்தை சேர்ந்தவர் சவரியம்மாள் 75. இவரது கணவர் வேதமுத்து 93. நான்கு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். சவரியம்மாளுக்கு சொந்தமான சொத்துகளை மகளிடம் கொடுத்தார்.
இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. நேற்று மதியம் 3:00 மணிக்கு தேவமுத்து கையால் தாக்கி கீழே தள்ளியதில் சவரியம்மாள்  இறந்தார். பின்னர் வேதமுத்து தொண்டி போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.

