/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பகுதி நேர வேலை ஆசை காட்டி வாலிபரிடம் ரூ.16.25 லட்சம் மோசடி
/
பகுதி நேர வேலை ஆசை காட்டி வாலிபரிடம் ரூ.16.25 லட்சம் மோசடி
பகுதி நேர வேலை ஆசை காட்டி வாலிபரிடம் ரூ.16.25 லட்சம் மோசடி
பகுதி நேர வேலை ஆசை காட்டி வாலிபரிடம் ரூ.16.25 லட்சம் மோசடி
ADDED : செப் 07, 2024 07:10 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியை சேர்ந்த வாலிபரிடம் இணைய வழியில் பகுதி நேர வேலை ஆசை காட்டி ரூ.16.25 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
உச்சிப்புளியை சேர்ந்தவர் பாலமுரளி 33. பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர் வேலையை ராஜினாமா செய்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பினார். அவரின் அலைபேசிக்கு பகுதி நேரத்தில் வீட்டில் இருந்தபடியே அதிக பணம் சம்பாதிக்கலாம் என டெலிகிராம் ஆப் மூலம் தெரிவித்துள்ளனர்.
அதில் இருந்த அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பாலமுரளிவிபரங்களை கேட்டறிந்தார். அதில் இணையதளத்தில் பிரபல ஓட்டல்களின் பங்குகளை வாங்கி விற்றால் அதற்கேற்ப கமிஷன் வழங்கப்படும் என்றனர்.
அதன்படி ஓட்டல் பங்குகளை வாங்கி விற்பனை செய்ததில் பாலமுரளியின் தனி கணக்கில் பணம் சேர்ந்தது. மகிழ்ச்சியடைந்த பாலமுரளி இரவு பகல் பாராது 16 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி பங்குகளை வாங்கி விற்பனை செய்தார்.
இதற்காக அவரது கணக்கில் பல லட்சம் பணம் சேர்ந்தது. அந்த பணத்தை எடுக்க முற்பட்ட போது மர்ம நபர்கள் பணத்தை எடுக்க சில கட்டணங்களை செலுத்த வேண்டும் என்றனர். இதனால் பணத்தை எடுக்க முடியாமல் பாலமுரளி செய்வதறியாது தவித்தார்.
தான் கட்டிய பணம் ரூ.16.25 லட்சத்தையாவது கொடுக்குமாறு கேட்டார். அந்த மர்ம நபர்களோ கட்டணங்களை செலுத்தினால் மட்டுமே பணத்தை எடுக்க முடியும் என்றதால் ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில்புகார்அளித்தார்.
சந்தீஷ் எஸ்.பி., நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். வழக்குப்பதிந்த சைபர் கிரைம் போலீசார் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் இருந்த 20 லட்சத்து 58 ஆயிரத்து 333 ரூபாயை முடக்கினர். பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.