ADDED : ஜூன் 14, 2026 05:22 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: -
ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் அமைப்பின் மத்திய, மாநில அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பணியாளர் தேர்வு வாரியத்தின் (எஸ்.எஸ்.சி.,) சி.ஜி.எல்., தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஜூன் 22 முதல் துவங்கப்படவுள்ளது. இதில் சேர விரும்பமுள்ளவர்கள் தங்களவு புகைப்படம், சுயவிவரங்களுடன் கலந்து கொள்ளலாம். இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு 04567-–230160, 94439 92758 என்ற தொலைபேசி, அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.––
