தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமேஸ்வரம்-- சென்னை இடையே பகல்நேர ரயில் இயக்க வலியுறுத்தல்

ராமேஸ்வரம்-- சென்னை இடையே பகல்நேர ரயில் இயக்க வலியுறுத்தல்

ராமேஸ்வரம்-- சென்னை இடையே பகல்நேர ரயில் இயக்க வலியுறுத்தல்


UPDATED : ஜூன் 14, 2026 05:23 PM

ADDED : ஜூன் 14, 2026 05:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 14, 2026 05:23 PM ADDED : ஜூன் 14, 2026 05:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் ரயில் இயக்க வேண்டும் என ராமேஸ்வரம் ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாநிலத் தலைநகரான சென்னைக்கு பகல்நேர ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு நேரடி பகல்நேர ரயில் வசதி இதுவரை இல்லை. இதனால் சென்னை செல்ல மதுரை, திருச்சி சென்று அங்கிருந்து ரயில் ஏற வேண்டியுள்ளது. தற்போது ராமேஸ்வரத்தில் இருந்து காரைக்குடி, திருச்சி, தஞ்சாவூர், கடலுார் வழியாகவும், திருச்சி, விருத்தாச்சலம் வழியாகவும், அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி வழியாகவும் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இவை இரவு நேர சேவைகளாக உள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் வழியாக சென்னை சென்ட்ரல் வரை செல்லும் வகையில் புதிய பகல்நேர விரைவு ரயிலை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்த வேண்டும். இதன் மூலம் கரூர், சேலம் போன்ற முக்கிய தொழில்துறை மாவட்டங்களுக்கும், தலைநகரான சென்னைக்கும் நேரடியாகவும் எளிதாகவும் பயணிக்க முடியும். வியாபாரிகள், மாணவர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், ஆன்மிக யாத்திரிகர்கள் பயனடைவார்கள். ராமேஸ்வரம் உலகப் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமாக இருப்பதால் புதிய பகல்நேர ரயில் சேவை சுற்றுலாபயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும். தென் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் துணைபுரியும் என்றனர். ---

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us