நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி, : கமுதி அருகே கோட்டைமேடு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் மூக்கையாத்தேவர் அரசு போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் சார்பில் கடந்த சில ஆண்டுகளாக இலவசமாக பயிற்சி வகுப்பு நடந்தது.
தற்போது ஜூன் 9ல் குரூப் 4 தேர்வு நடக்கிறது. இதை முன்னிட்டு மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ளும் விதமாக இந்த பயிற்சி மையத்தின் சார்பில் ஜூன் 2ல் இலவச மாதிரி தேர்வு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவுக் கல்லுாரியில் நடக்கிறது.
தேர்வில் கலந்து கொள்வோர் ஹால் டிக்கெட் நகல் கட்டாயம் கொண்டு வர வேண்டும். முடிவில் ஓ.எம்.ஆர்., சீட்டு மூலம் திருத்தம் செய்யப்பட்டு மதிப்பெண் வழங்கப்படும். முதல் மூன்று இடம் பிடிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என முன்னாள் மாணவர்கள் சங்கம் தெரிவித்தனர்.