/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோயில்களில் பவுர்ணமி பூஜை கொண்டாட்டம்
/
கோயில்களில் பவுர்ணமி பூஜை கொண்டாட்டம்
ADDED : ஆக 20, 2024 07:20 AM
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சிநேகவல்லி அம்மன், திருவெற்றியூர் பாகம்பிரியாள் அம்மனுக்கு நேற்று பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. அம்மனுக்கு சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வகை அபிேஷகம் நடந்தது.
சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
*முதுகுளத்துார் செல்லி அம்மன் கோயிலில் அம்மனுக்கு பால், மஞ்சள், சந்தனம், பன்னீர், திரவிய பொடி உட்பட 21 வகை அபிஷேகம், தீபாராதனை நடந்தது. செல்லிஅம்மன் பக்தர்கள் குழு சார்பில் சாந்தா தலைமையில் 108 விளக்கு பூஜை நடந்தது.
இதில் முதுகுளத்துார், துாரி, செல்வநாயகபுரம் அதனை சுற்றியுள்ள கிராமத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பக்தர்கள் குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
முதுகுளத்துார் அருகே கீழக்காஞ்சிரங்குளம் கிராமத்தில் மகாதேவர் கோயிலில் விளக்கு பூஜை நடந்தது. மூலவரான மகாதேவருக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.