/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆர்.எஸ்.மங்கலத்தில் விநாயகர் ஊர்வலம்
/
ஆர்.எஸ்.மங்கலத்தில் விநாயகர் ஊர்வலம்
ADDED : செப் 08, 2024 04:24 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் கற்பக விநாயகர் சிலை வழிபாட்டு குழுவினர் சார்பில் விநாயகர் ஊர்வலம் நடந்தது.
முன்னதாக திரவுபதிஅம்மன் கோயிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்ற விநாயகர் ஆர்.எஸ். மங்கலம் பூவாணிக்கரை, கூ.கூ.விநாயகர் கோயிலில் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.
முன்னதாக கூ.கூ.விநாயகருக்கு கிராமத்தார்சார்பில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு கொழுக்கட்டை, சுண்டல் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டன.
பின்னர் கூ.கூ.விநாயகர்கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகர், பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கைலாசநாதர் கோயில் வளாகத்தில் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. ஏற்பாடுகளை கற்பக விநாயகர் சிலை வழிபாட்டு குழு இளைஞர்கள் செய்திருந்தனர்.