ADDED : ஜூலை 08, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர்கள் நலச்சங்கத்தில் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் உமா மகேஸ்வரன் தலைமை வகித்தார். செயலாளர் தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தார். இறந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் அனுசரிக்கப்பட்டது. தொடர்ந்து ஓய்வூதியரின் மாத சந்தா ரூ.397ல் இருந்து ரூ.644 ஆக உயர்த்தியதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஓய்வூதியர்களின் வயதிற்கேற்ப கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிர்வாகிகள் ராமசாமி, கார்த்திகேயன், கண்ணன், தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ––
