/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெண்கள் பள்ளிக்கு கூடுதல் கழிப்பறை தேவை
/
பெண்கள் பள்ளிக்கு கூடுதல் கழிப்பறை தேவை
ADDED : ஆக 13, 2024 11:14 PM
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தினர்.
ஆர்.எஸ்.மங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆர்.எஸ்.மங்கலம், சிலுகவயல், புல்லமடை, வல்லமடை, ராமநாதமடை, பெருமாள்மடை, செட்டியமடை, சவேரியார் பட்டினம், இந்திரா நகர், ஆவரேந்தல், பிச்சனார்கோட்டை, பெத்தார் தேவன் கோட்டை, நோக்கன் கோட்டை, பெரியார் நகர் உள்ளிட்ட பகுதி யில் இருந்து 750க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர்.
பள்ளியில் போதிய கழிப்பறை வசதி இல்லை. இதனால் இடைவேளை நேரங்களில் இயற்கை உபாதை கழிப்பதற்கு மாணவிகள் சிரமத்தை சந்திக்கின்றனர். இதனால் பெரும்பாலான மாணவிகள் பள்ளி நேரத்தில் தண்ணீர் பருகுவதை குறைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்று வரும் நிலை உள்ளதாக மாணவிகளின் பெற்றோர் கவலை தெரிவித்தனர்.
இதனால் மாணவிகள் பல்வேறு உடல் உபாதைக்கு ஆளாகும் நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் பெண்கள் பள்ளியில் கூடுதல் கழிப்பறை வசதி ஏற்படுத்தவும், பள்ளிக்கு குடிநீர் வசதி செய்ய வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தினர்.