/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 04, 2024 01:10 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமநாதபுரம் வட்டக் கிளை பொருளாளர் மனோஜ் குமார் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் நஜ்முதீன், துணைத் தலைவர் முனீஸ் பிரபு, துணைச் செயலாளர் ஜெனிஸ்டர் பங்கேற்றனர்.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டர் விடுப்பு ஆகிய உரிமைகளை வழங்க வேண்டும்.
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்டவை குறித்து வலியுறுத்தினர்.
இதுபோல பரமக்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் சேகர் தலைமை வகித்தார்.
மாவட்டத்துணை தலைவர் பாண்டி, கிளை நிர்வாகிகள், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.