/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குவைத் தீ விபத்தில் இறந்தவர் உடல் சொந்த ஊரில் அடக்கம் குடும்பத்திற்கு அரசு நிதி உதவி

ADDED : ஜூன் 16, 2024 04:34 AM
பரமக்குடி:குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர்இழந்த ராமு உடல் சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம்பரமக்குடி அருகே தென்னவனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு 60. இவர் குவைத் நாட்டில்பணியாற்றிய நிலையில் அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானார்.
தொடர்ந்து மத்திய அரசின் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் உடல் தமிழகம் வந்து சேர்ந்தது. நேற்று முன்தினம் இரவு உடல் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
அப்போது தமிழக அரசு சார்பில் அறிவித்த ரூ.5 லட்சம் காசோலையை ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு குடும்பத்தாரிடம் நேற்று காலை ஒப்படைத்தார்.
பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன், தாசில்தார் சாந்தி, போகலுார் ஒன்றிய துணைத் தலைவர் பூமிநாதன் உட்பட பலர் உடன் இருந்தனர். பின்னர் குடும்பத்தினர் இறுதி மரியாதை செய்த பின் உடல் தகனம் செய்யப்பட்டது.