/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பன்னந்தையில் காட்சிப்பொருளாக அரசு துணை சுகாதார நிலையம்
/
பன்னந்தையில் காட்சிப்பொருளாக அரசு துணை சுகாதார நிலையம்
பன்னந்தையில் காட்சிப்பொருளாக அரசு துணை சுகாதார நிலையம்
பன்னந்தையில் காட்சிப்பொருளாக அரசு துணை சுகாதார நிலையம்
ADDED : ஜூலை 21, 2024 04:34 AM
சிக்கல்: -சிக்கல் அருகே பன்னந்தை ஊராட்சியில் 2022ம் ஆண்டு ரூ.30 லட்சத்தில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டும் பயனின்றி காட்சிப்பொருளாக உள்ளது.
பன்னந்தை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் பயனடையும் வகையில் அமைக்கப்பட்ட துணை சுகாதார நிலையம் திறப்பு விழாவிற்கு பிறகு எந்த பயன்பாடும் இல்லாமல் பூட்டியே கிடக்கிறது.
துணை சுகாதார நிலையத்தில் பணியாற்றும் டாக்டர், செவிலியர்கள் யாரும் இல்லாததால் காட்சிப் பொருளாக பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.
கிராம மக்கள் கூறியதாவது: காய்ச்சல், தலைவலி, விஷக்கடி உள்ளிட்ட அத்தியாவசிய முதலுதவிகளுக்கு துணை சுகாதார நிலையம் பயன்படுகிறது. மேலும் கர்ப்பிணிகள், வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கவும் துணை சுகாதார நிலையம் பயன்படுகிறது.
எனவே அரசு நிதி வீணடிப்பதை தவிர்க்க பன்னந்தை துணை சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மருத்துவத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.