/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
'ைஹடெக் லேப்' இன்றி பயிற்சியா அரசு பள்ளி ஆசிரியர்கள் குமுறல்
/
'ைஹடெக் லேப்' இன்றி பயிற்சியா அரசு பள்ளி ஆசிரியர்கள் குமுறல்
'ைஹடெக் லேப்' இன்றி பயிற்சியா அரசு பள்ளி ஆசிரியர்கள் குமுறல்
'ைஹடெக் லேப்' இன்றி பயிற்சியா அரசு பள்ளி ஆசிரியர்கள் குமுறல்
ADDED : ஆக 26, 2024 04:30 AM
ராமநாதபுரம்: தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் பெருபான்மையான பள்ளிகளில் 'ைஹடெக் லேப்' அமைக்கப்படாமல் அதுகுறித்துப் பயிற்சி வழங்கி என்ன பயன், என ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் அரசு பள்ளிகளில் 'ைஹடெக் லேப்' அமைத்து அது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். அரசு பள்ளிகளில் மும்முனை மின்சார இணைப்புகளே இல்லை. அது இருந்தால் மட்டுமே ைஹடெக் லேப் அமைக்க முடியும். இந்த லேபில் கம்ப்யூட்டர்கள் பொருத்தப்பட்டு மாணவர்களுக்கு மன எழுச்சி குறித்த வீடியோக்கள் காட்டப்பட்டு அதில் கேள்வி கேட்கப்பட்டு பதிலை பதிவு செய்யப்படுகிறது.
மொழி ஆய்வகம் மூலம் மொழியறிவு குறித்து சோதிக்கப்படுகிறது. அடைவுத்தேர்வு போன்ற பல்வேறு விபரங்கள் ைஹடெக் லேபில் உள்ளன. இதில் பெரும்பான்மை பள்ளிகளில் லேப் இல்லை. அமைக்கப்பட்ட லேப்களில் சர்வர் சரியாக இல்லை போன்ற பிரச்னைகளை பள்ளி ஆசிரியர்கள் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் ைஹடெக் லேப் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி நடக்கிறது. அரசுப்பள்ளிகளில் லேப் இல்லாமல் பயிற்சி வழங்குவதால் என்ன பலன், என ஆசிரியர்கள் தரப்பில் குமுறுகின்றனர். அனைத்துப்பள்ளிகிளிலும் ைஹடெக் லேப் அமைத்த பின் பயிற்சி வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

