/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் அரசு துணை சுகாதார நிலையம்
/
திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் அரசு துணை சுகாதார நிலையம்
திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் அரசு துணை சுகாதார நிலையம்
திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் அரசு துணை சுகாதார நிலையம்
ADDED : செப் 16, 2024 05:20 AM

திருப்புல்லாணி : திருப்புல்லாணி அருகே தினைக்குளம் ஊராட்சியில் 1982ம் ஆண்டு அரசு துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் அத்தியாவசிய முதுலுதவி உள்ளிட்ட சிகிச்சைகளுக்காக துணை சுகாதார நிலையத்தை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் 2015 முதல் முற்றிலும் சேதமடைந்ததால் பணியாற்ற செவிலியர்களும், சிகிச்சைக்கு வர நோயாளிகள் அச்சப்பட்டனர். துணை சுகாதார நிலையத்தின் நிலை குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக 2022ல் ஆபத்தான துணை சுகாதார நிலையம் அகற்றப்பட்டது.
அதே இடத்தில் 15-வது நிதிக் குழு மானியம் 2021 -2022 திட்டத்தில் ரூ.30 லட்சத்தில் புதிய துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. தினைக்குளம் பகுதி மக்கள் கூறியதாவது:
இப்பகுதியில் துணை சுகாதார நிலையம் அத்தியாவசிய தேவையாக உள்ளது. கர்ப்பிணிகள், பெண்கள், முதியவர்கள், சுகர், பிரஷர் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக துணை சுகாதார நிலையம் வருகின்றனர்.
இந்நிலையில் கட்டப்பட்டு மூன்று மாதங்களுக்கும் மேலாகியும் துணை சுகாதார நிலையம் திறப்பு விழாவிற்கு காத்திருக்கிறது. அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய துணை சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், அங்கேயே தங்கி பணிபுரியும் வகையில் செவிலியர் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

