/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
/
பரமக்குடியில் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 22, 2024 02:33 AM

பரமக்குடி: -தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் சார்பில் பரமக்குடி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் பூப்பாண்டியன் தலைமை வகித்தார். மகளிர் அணி செயலாளர்கள் கரோலின் சாந்தகுமாரி, ராமலட்சுமி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரமேஷ் கண்ணன் வரவேற்றார். முன்னாள் மாநில துணைத்தலைவர் திருநீலகண்ட பூபதி பேசினார்.
அப்போது தமிழக அரசு 20 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
இதன்படி ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
அண்ணா முதல்வராக இருந்த போது வழங்கிய ஊக்க ஊதிய தொகுப்பை பறிமுதல் செய்ததை மீண்டும் வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்குவதை போன்று தமிழக ஆசிரியர்களுக்கும் அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை நாட்களாக அறிவித்திட வேண்டும்.
மேலும் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த பள்ளி வேலை நாட்கள் 200 என்பதை 220 வேலை நாட்களாக மாற்றி இருப்பதை பள்ளிக் கல்வித்துறை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மாவட்ட பொருளாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.