/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் பள்ளியில் நவீன வகுப்பறைகளுடன் பசுமை வளாகம்
/
பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் பள்ளியில் நவீன வகுப்பறைகளுடன் பசுமை வளாகம்
பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் பள்ளியில் நவீன வகுப்பறைகளுடன் பசுமை வளாகம்
பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் பள்ளியில் நவீன வகுப்பறைகளுடன் பசுமை வளாகம்
ADDED : மே 22, 2024 07:56 AM
பரமக்குடி : பரமக்குடி லயன்ஸ் பள்ளி 1991ல் சிறிய வாடகை கட்டடத்தில் பரமக்குடி லயன்ஸ் சங்கத்தால் துவக்கப்பட்டது.
பரமக்குடியில் அரசு அனுமதி பெற்ற துவக்கப்பள்ளி இல்லாத குறையை போக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இப்பள்ளி துவங்கப்பட்டது. தரமான கல்வியை குறைந்த கட்டணத்தில் நவீன வகுப்பறை, பசுமை வளாகம், பாதுகாப்பான வாகனங்கள், திறமையான, கனிவான ஆசிரியர்கள், துாய்மையான குடிநீர், நவீன விளையாட்டு மைதானம், சிறந்த சுகாதார வளாகத்துடன், 'வாழ்வதற்கு கல்வி' என்ற தாரக மந்திரத்துடன் தேர்வுகளில் சாதனைகளை படைத்து வந்துள்ளது.
இப்பள்ளி 2003ல் சொந்த கட்டடத்தில் செயல்பட துவங்கியது. யோகா, ஸ்கேட்டிங், வில் வித்தை, அபாகஸ், கராத்தேயில் மாணவர்கள் பரிசுகளை குவித்து வருகின்றனர்.
பள்ளி லயன்ஸ் கல்வி அறக்கட்டளை தலைவர் சவுந்தர நாகேஸ்வரன், செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் ஆடிட்டர் தினகரன், முன்னோடி லயன்ஸ் உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் நிர்வாகம் செயல்படுகிறது. அவர்கள் கூறியதாவது: சாதனைகள் பல படைத்திட முன்னாள் மாணவர்கள் பலரும் பல துறைகளில் பிரகாசிக்கின்றனர். தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் அனைத்து தரப்பினரையும் நன்றியுடன் நினைவு கூர்ந்து வாழ்த்துகிறோம்.
2024--25ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை சரியான கட்டணத்துடன் செயல்படுகிறது. பரமக்குடி சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கு பள்ளி வாகனம் சென்று வருகிறது. பெற்றோர் குழந்தைகளை எங்கள் பள்ளியில் சேர்த்து பயன் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

