நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிக்கல்: -சிக்கலில் கடலாடி கிழக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடந்தது. அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி என்ற முழக்கத்தோடு பொதுமக்களை சந்தித்து கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கடலாடி கிழக்கு ஒன்றியத் தலைவர் எம்.எஸ். ஸ்டாலின் தலைமை வகித்தார். பொறுப்பாளர்கள் சுரேஷ்பாபு, பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் நாகூர் பாண்டியன், விவசாய அணி மாவட்ட தலைவர் திரவிய பாண்டியன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர். பொதுமக்களிடம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.