/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிறுமிக்கு தொல்லை: பள்ளி நிர்வாகி சரண்
/
சிறுமிக்கு தொல்லை: பள்ளி நிர்வாகி சரண்
ADDED : ஆக 17, 2024 01:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்:-ராமநாதபுரம் அருகே வாலாந்தரவையில் மன வளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி உள்ளது. இங்கு ஏர்வாடி பகுதியை சேர்ந்த 18 வயது மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பள்ளி நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது பெற்றோர் ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
இதன் அடிப்படையில் பள்ளி செயலாளர் ராமநாதபுரம் அரண்மனை வடக்குரத வீதியை சேர்ந்த தசரதபூபதி 55, மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிந்து போலீசார் அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் அவர் நேற்று ராமநாதபுரம் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஆக.30 வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.