/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நெடுஞ்சாலை பாலம் சுத்தம் செய்யும் பணி
/
நெடுஞ்சாலை பாலம் சுத்தம் செய்யும் பணி
ADDED : ஆக 12, 2024 11:52 PM

திருவாடானை : பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலங்களை சுத்தம் செய்யும் பணிகள் நடக்கிறது.
திருவாடானை தாலுகாவில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பாலங்கள் உள்ளன. பருவமழை துவங்க இருப்பதால் அதற்கு முன் அனைத்து பாலங்களிலும் மழை நீர் செல்வதற்கு ஏதுவாக முட்புதர்கள், செடிகள் அகற்றும் பணி துவங்கியுள்ளது.
திருவாடானை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சவுந்தரராஜன், இளநிலை பொறியாளர் லட்சுமணன் தலைமையில் சாலைப் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். மணல் அள்ளும் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யப்பட்டது.
அலுவலர்கள் கூறுகையில், பருவ மழையின் போது முன்னெச்சரிக்கையாக ரோடுகளில் மழை நீர் தேங்கி பெருக்கெடுப்பதை தவிர்க்கவும், போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்கவும் பாலங்களை சுத்தம் செய்யும் பணி நடக்கிறது என்றனர்.

