/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வீட்டு வசதி வாரியத்தின் பொறியாளர் அலுவலகம் 'ஜப்தி'
/
வீட்டு வசதி வாரியத்தின் பொறியாளர் அலுவலகம் 'ஜப்தி'
வீட்டு வசதி வாரியத்தின் பொறியாளர் அலுவலகம் 'ஜப்தி'
வீட்டு வசதி வாரியத்தின் பொறியாளர் அலுவலகம் 'ஜப்தி'
ADDED : பிப் 27, 2025 01:24 AM

ராமநாதபுரம்:-ராமநாதபுரத்தில் நிலம் கையகப்படுத்தியதில் உரிய இழப்பீடு வழங்காத வீட்டுவசதி வாரிய பொறியாளர் அலுவலகத்தை, நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் பகுதியைச் சேர்ந்தவர் அகமது ஜலால், 63. அப்பகுதியில் இவருக்கு சொந்தமான நிலம், 1997ல் ராமநாதபுரம் கோட்டாட்சியரால் கையகப்படுத்தப்பட்டு தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்காக, 2007 அக்., 31ல் 10.23 லட்சம் ரூபாயை முதல் தவணையாக வீட்டுவசதி வாரியம் வழங்கியது. இரண்டாவது தவணையாக, 2009 மே 18ல் 5.87 லட்சம் ரூபாயை வழங்கியது. மீதமுள்ள தொகையை வழங்கவில்லை.
இந்த தொகையைப் பெற, ராமநாதபுரம் சப்-கோர்ட்டில் அகமது ஜலால் நிறைவேற்றுதல் மனு கொடுத்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி அகிலாதேவி, ராமநாதபுரம் வீட்டுவசதி வாரிய பொறியாளர் அலுவலகத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
இதன்படி அகமது ஜலால், வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், கோர்ட் முதுநிலை கட்டளை நிறைவேற்றுபவர் ஆனந்தராஜ் ஆகியோர் வீட்டுவசதி வாரிய பொறியாளர் அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்து நேற்று எடுத்துச் சென்றனர்.---------

