/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கணவர், மனைவியை தாக்கி நகை பறிப்பு
/
கணவர், மனைவியை தாக்கி நகை பறிப்பு
ADDED : ஜூலை 01, 2024 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி, : -கமுதி அருகே பம்மனேந்தலைச் சேர்ந்த தலையாரி நாகஜோதி 38. கமுதியில் இருந்து பம்மனேந்தலுக்கு தனது கணவர் சோலைராஜுடன் டூவீலரில் நாகஜோதி சென்றுள்ளார்.
அப்போது செந்தனேந்தல் அருகே வந்த 2 பேர் டூவீலரை வழிமறித்து, பேசுவதுபோல நடித்து நாகஜோதியின் கழுத்தில் அணிந்திருந்த5 பவுன் செயினை பறித்து அவர்களை கீழே தள்ளி விட்டு தப்பினர்.
இதில் நாகஜோதி, சோலைராஜு காயமடைந்துள்ளனர். கமுதி போலீசார் விசாரிக்கின்றனர்.