/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அம்மா உணவகத்தில் சுகாதாரம் பராமரித்த பணியாளர்கள்
/
அம்மா உணவகத்தில் சுகாதாரம் பராமரித்த பணியாளர்கள்
ADDED : மே 06, 2024 12:31 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் சுகாதார கேடுகள் குறித்து தினமலர் நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியாக பணியாளர்கள் துப்புரவு பணிகளை மேற்கொண்டனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில்அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு உணவக வாசலில் சாக்கடை நீர் தேங்கியிருந்தது. இதனால் நோயாளிகள் உணவு உண்பதற்கு வருவதில்லை.
இப்பகுதியில்வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக இருந்தது.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்
சுகாதார சீர்கேடுகளைசரிசெய்து மக்கள் உணவகத்திற்கு வருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.