/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் வறட்சியை வளர்ச்சியாக மாற்றுவேன் : ஓ.பி.எஸ்., வாக்குறுதி -------
/
ராமநாதபுரம் வறட்சியை வளர்ச்சியாக மாற்றுவேன் : ஓ.பி.எஸ்., வாக்குறுதி -------
ராமநாதபுரம் வறட்சியை வளர்ச்சியாக மாற்றுவேன் : ஓ.பி.எஸ்., வாக்குறுதி -------
ராமநாதபுரம் வறட்சியை வளர்ச்சியாக மாற்றுவேன் : ஓ.பி.எஸ்., வாக்குறுதி -------
ADDED : ஏப் 18, 2024 05:09 AM
ராமநாதபுரம்: வறட்சியான ராமநாதபுரத்தை வளர்ச்சியானதாக மாற்றுவேன் என பா.ஜ., கூட்டணி வேட்பாளர் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பா.ஜ., தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.
அவர் ஏப்.1ல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்து அங்கிருந்து பிரசாரத்தை துவக்கினார்.  நேற்று மீண்டும் ராமேஸ்வரத்தில் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பன்னீர் செல்வம் பேசியதாவது: 45 ஆண்டு கால அரசியிலில் நகரசபை தலைவர் முதல் முதல்வர் அனைத்து பதவிகளையும் ஜெயலலிதா எனக்கு வழங்கினார்.
எவ்வாறு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மீட்டு எடுத்து தமிழர்களின் உரிமையை பெற்றுக்கொடுத்தேனோ, அதே போல் மக்களின் தார்மீக உரிமையான கச்சத்தீவிற்கும், மீனவர் பிரச்னைக்கும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து தீர்வு காண்பேன்.
மக்கள் வளர்ச்சிக்காக குடிநீர் வசதி வேளாண்துறை, கல்வி, மருத்துவம், மின்சாரம் சாலைகள், பாலங்கள், போக்குவரத்துத்துறை, தொழில்துதுறை, ரயில்வே துறை போன்ற அடிப்படை வசதிகளுக்காக லோக்சபாவில் குரல் கொடுப்பேன். வறட்சி மிக்க பகுதியை, வளம் மிகுந்த பகுதியாக மாற்றுவேன். ராமநாதபுரத்தை இந்தியாவில் முதன்மை தொகுதியாக மாற்றுவேன் என்றார்.---------

