/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளிகளில் ைஹடெக் ஆய்வக பணியாளர் நியமன கலந்தாய்வு
/
பள்ளிகளில் ைஹடெக் ஆய்வக பணியாளர் நியமன கலந்தாய்வு
ADDED : ஜூன் 14, 2024 04:39 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் புனித ஆண்ட்ரூஸ் பெண்கள் மேல் நிலைப்பள்ளி கூட்ட அரங்கத்தில் நடுநிலைப் பள்ளிகளுக்கான (ைஹடெக்) உயர் தொழில் நுட்ப நிர்வாகி மற்றும் பயிற்றுநர் பணிக்கான கலந்தாய்வு நடந்தது.
முதன்மைக் கல்வி அலுவலர் (பொறுப்பு) பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ் தலைமை வகித்தார். இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் லியோன் வரவேற்றார். ஆய்வக பணிகள் மற்றும் செயல்பாடு பற்றி உதவித்திட்ட அலுவலர் செல்வராஜ் விளக்கி பேசினார்.
175 பள்ளிகளுக்கு உயர் தொழில்நுட்ப நிர்வாகி, பயிற்றுநர் பணிக்கான கலந்தாய்வு நடந்தது.
உதவி திட்ட அலுவலர்கள் கர்ணன், தர்மராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன், பாலமுருகன், முருகேஸ்வரி, தினசேகர், வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.