/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானையில் கோடை உழவு தீவிரம் வாடகை உயர்வால் விவசாயிகள் கவலை
/
திருவாடானையில் கோடை உழவு தீவிரம் வாடகை உயர்வால் விவசாயிகள் கவலை
திருவாடானையில் கோடை உழவு தீவிரம் வாடகை உயர்வால் விவசாயிகள் கவலை
திருவாடானையில் கோடை உழவு தீவிரம் வாடகை உயர்வால் விவசாயிகள் கவலை
ADDED : மே 30, 2024 10:17 PM

திருவாடானை- திருவாடானை தாலுகாவில் கோடை உழவுப் பணிகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில் டிராக்டர் வாடகை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
திருவாடானை தாலுகாவில் தொண்டி, மங்களக்குடி, ஆண்டாவூரணி, ஆதியூர், நெய்வயல், டி.நாகனி, திருவெற்றியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உழவுப் பணிகள் நடந்து வருகிறது. இப்பகுதி விவசாயிகள் உழவுக்கு டிராக்டர்களையே நம்பியுள்ளனர்.
ஒரே நேரத்தில் இயந்திரங்களின் தேவை அதிகரித்துள்ளதால் டிராக்டர்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டிராக்டர்களுக்கு உழவு வாடகை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
அரும்பூர் விவசாயிகள் கூறுகையில், கடந்தாண்டு ஒரு மணி நேரத்திற்கு உழவு கட்டணம் ரூ.800 வரை வசூல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு ரூ.900 முதல் 1000 வரை உயர்ந்துள்ளது.
கூடுதலாக வசூலித்தாலும் குறித்த நேரத்தில் உழவுப் பணிகள் நடப்பதில்லை. வேளாண் பணிகளுக்கு செலவு அதிகரித்துள்ளதால் சமாளிக்க சிரமமாக உள்ளது என்றார்.