/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா
/
கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா
ADDED : ஜூலை 04, 2024 01:13 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை-அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு துவக்க விழா நடந்தது.
கல்லுாரித் தாளாளர் செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளித் தாளாளர் ராஜாத்தி முதல்வர் பாலகிருஷ்ணன், செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் பாத்திமா சானாஸ் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர் உத்வேக பேச்சாளர் டாக்டர் ஜெகன் மாணவர்கள் முயற்சி, பயிற்சியை தொடர்ச்சியாக மனதில் நிறுத்தி தன்னம்பிக்கையுடன் படித்தால் வெற்றி நிச்சயம் எனப்பேசினார்.
நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, மேற்பார்வையாளர் சபியுல்லா, துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் பங்கேற்றனர்.