/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கமுதி மாலையம்மன் கோயில் திறப்பு
/
கமுதி மாலையம்மன் கோயில் திறப்பு
ADDED : ஜூலை 23, 2024 11:18 PM
கமுதி : கமுதி அருகே செந்தனேந்தல் கிராமத்தில் மாலையம்மன் கோயிலை நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு திறக்கப்பட்டது.
கமுதி அருகே செந்தனேந்தல் கிராமத்தில் மாலையம்மன் கோயிலை நிர்வகிப்பது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த முருகன், ராமர் இருதரப்பினரிடையே பிரச்னை இருந்து வந்தது. உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு நடந்தது. இது தொடர்பாக தாசில்தார் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
கமுதி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் காதர் முகைதீன் தலைமையில் இன்ஸ்பெக்டர் குருநாதன், மண்டல துணை தாசில்தார் வெங்கடேஸ்வரன் முன்னிலையில்பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. இதில் மாலையம்மன் கோயிலை வருவாய்த்துறையினர், போலீஸ் பாதுகாப்புடன் சென்று திறப்பது.
இரு தரப்பினரும் சமாதானமாக வழிபாடு நடத்தவும், பூஜாரி நியமனம், நிர்வாகம் தொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவு வரும் வரை இருதரப்பினரும் கோயிலை பூட்டக்கூடாது எனவும் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை முருகன் தரப்பினர் ஏற்றுக்கொள்ளாமல் சமாதான கூட்டத்தை புறக்கணித்து நீதிமன்றத்திற்கு சென்று தீர்த்துக் கொள்வதாக கூறி வெளி நடப்பு செய்தனர். இதையடுத்து கோயிலை பக்தர்கள் வழிபாட்டுக்காக திறந்து வைக்க தாசில்தார் காதர் முகைதீன் உத்தரவிட்டார்.
அதன்படி போலீஸ் பாதுகாப்புடன் மண்டல துணை தாசில்தார் வெங்கடேஸ்வரன், ஆர்.ஐ.,பரமேஸ்வரி, எஸ்.ஐ., சக்திவேல் கணேஷ் முன்னிலையில் திறந்தனர்.