ADDED : ஜூன் 19, 2024 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம், : ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பழைய செக்போஸ்ட் அருகே பழைய யுனைட்டடு மெட்ரிக் பள்ளி கட்டடத்தில் புதிதாக அமெரிக்கன் இன்டர்நேஷனல் பிளே ஸ்கூல் துவக்கப்பட்டுள்ளது.இதன் திறப்பு விழா நடந்தது.
தாளாளர் வினோத் தலைமை வகித்தார், முதல்வர் சங்கீதா முன்னிலை வகித்தார். புவனேஸ்வரி, முருகன், சங்கர், லலிதா ஆகியோர் திறந்து வைத்தனர். இங்கு புதிய முறையில் வால்ட்ராம் பாடத்திட்டம் முறையில் விளையாட்டு மூலம் குழந்தைகளுக்கு கல்வி கற்றுத்தரப்படுவதாக முதல்வர் சங்கீதா தெரிவித்தார்.--