/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகனப் பிரசாரம் துவக்க விழா
/
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகனப் பிரசாரம் துவக்க விழா
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகனப் பிரசாரம் துவக்க விழா
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகனப் பிரசாரம் துவக்க விழா
ADDED : ஆக 12, 2024 04:39 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசார வாகனம் துவக்க நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்த அதிநவீன மின்னணு விளம்பர வாகனத்தை துவக்கி வைத்தார். மக்கள் வீடுகளில் மழைநீர் வடிகுழாய் அமைப்பு, மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
விவசாய நிலங்களில் பண்ணை குட்டை அமைத்து மழைக்காலங்களில் தண்ணீர் தேக்கி பயன்பெறலாம்.
குடிநீரை பரிசோதனை செய்து பயன்படுத்துவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பிரசார வாகனம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு செல்கிறது என கலெக்டர் கூறினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, மாவட்ட வன அலுவலர் ஹேமலதா, உதவி கலெக்டர் (பயிற்சி) முகமது இர்பான், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செயற்பொறியாளர் சவடமுத்து, உதவிப் பொறியாளர்கள் முத்துகிருஷ்ணன், குமரேசன், ஆறுமுகம் பங்கேற்றனர்.