/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாதுகாப்பாற்ற முறையில் கொண்டு செல்லப்பட்ட முத்திரைத்தாள்கள்
/
பாதுகாப்பாற்ற முறையில் கொண்டு செல்லப்பட்ட முத்திரைத்தாள்கள்
பாதுகாப்பாற்ற முறையில் கொண்டு செல்லப்பட்ட முத்திரைத்தாள்கள்
பாதுகாப்பாற்ற முறையில் கொண்டு செல்லப்பட்ட முத்திரைத்தாள்கள்
ADDED : ஏப் 26, 2024 02:11 AM

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்ட கருவூலத்தில் இருந்து சார்நிலை கருவூல அலுவலங்களுக்கு பல லட்சம் ரூபாய் முத்திரைத்தாள்களை திறந்தவெளியில் மினி லாரியில்கொண்டு சென்றதால் பாதுகாப்பு கேள்விக் குறியானது.
நிலம் உள்ளிட்டவை தொடர்பாக பத்திரப்பதிவு நடக்கும் போது அரசுக்கு வரியாக செல்லும் பணம் முத்திரைத்தாள் கட்டணம் என்ற பெயரில் அரசின் கருவூலத்திற்கு செல்லும்.
முத்திரைத்தாள்களில் விற்பனையாளரின் பெயர், கையொப்பம் இடம் பெற்றிருக்கும். எந்தக் கருவூலத்தில் இருந்து பெறப்பட்டது என்பதற்கான முத்திரையும் இடப்பட்டிருக்கும்.
அதிக விலை மதிப்புடைய முத்திரைத்தாள்களில் சம்பந்தப்பட்ட உதவிக் கருவூல அதிகாரியின் கையொப்பம், அலுவலக வட்ட முத்திரையும் இடப்பட்டிருக்கும். இவற்றை பாதுகாப்பாக மாவட்ட கருவூலத்தில் இருந்து சார்நிலை கருவூலங்களுக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.
இந்நிலையில் நேற்று ராமநாதபுரம் மாவட்ட கருவூலத்தில் இருந்து எவ்வித பாதுகாப்பும் இன்றி மினி லாரியில் திறந்தவெளியில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள முத்திரைத்தாள்களை அனுப்பினர். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கமுதி சார்நிலை கருவூலத்திற்கு மினி லாரியில் சாதாரண காகிதத்தை போல பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள முத்திரைதாள்களை ஏற்றிச்சென்றனர். அவற்றை புகைப்படம் எடுத்த நிலையில் அலுவலர்கள் தடுத்தனர்.
போலீஸ் பாதுகாப்பின்றி முத்திரைத்தாள்களை சாதாரண காகிதம் போல திறந்தவெளியில் எடுத்து செல்வதால் திடீர் மழை, பலத்த காற்று வீசினால் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். இவற்றை பாதுகாப்பாக கொண்டு செல்ல அதகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

