கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுகம்
கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுகம்
ADDED : ஜூலை 09, 2026 06:44 PM

அ நிறம் | அளவு
கீழக்கரை: கீழக்கரை செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக விழா நடந்தது. முதல்வர் ராஜசேகர் தலைமை வகித்து கல்லுாரியின் சிறப்புகள் மற்றும் துறைத் தலைவர்களை அறிமுகம் செய்து வைத்தார். துணை முதல்வர் பெரோஸ்கான் வரவேற்றார். சர்வதேச வாழ்வியல் வழிகாட்டியாளர் சென்னை பால் சுகில் சிறப்பு விருந்தினராக பேசினார்.
கல்லுாரியில் சேர்ந்த மாணவர்களில் மேல்நிலைப் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கணினி அறிவியல் துறை தலைவர் காசிக்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர் சுலைமான், விளையாட்டுத்துறை இயக்குனர் தவசி லிங்கம், நுாலகர் பால்ராஜ், பேராசிரியர்கள் பரிமளா தேவி, சாகுல் ஹமீது, சதாம் உசேன் உள்ளிட்ட கல்லுாரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
