தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஏனாதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க கோரிக்கை

ஏனாதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க கோரிக்கை

ஏனாதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க கோரிக்கை


ADDED : ஜூலை 09, 2026 07:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 07:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே ஏனாதி கிராமத்தில் காவிரி குடிநீர் மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

முதுகுளத்துார் அருகே ஏனாதி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. குடிநீர் தேவைக்காக 1999ம் ஆண்டு நரிப்பையூர் கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்திற்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. திட்டம் 10 ஆண்டுகளில் நிறுத்தப்பட்டதால் 2009ம் ஆண்டு முதல் காவிரி குடிநீர் ஏற்றப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

தற்போது தொட்டி கட்டப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் சேதமடைந்து வலுவிழந்து காணப்படுகிறது. இதனை அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்து மராமத்து பணி செய்து மட்டும் வந்தனர். ஏனாதி கிராமத்திற்கு தற்போது முறையாக காவிரி குடிநீர் வருவது கிடையாது. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி காட்சிப்பொருளாக உள்ளது.

மக்கள் டிராக்டர் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவலநிலை உள்ளது. தற்போது ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கரூர் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஏனாதியில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படவில்லை. இதற்கு பதிலாக பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மராமத்து பணி செய்து புதிதாக பயன்படுத்துவதற்கும் வாய்ப்பு உள்ளது.

எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து பழைய தொட்டியை இடித்து அகற்றி புதிதாக தொட்டி கட்டுவதற்கும், தினந்தோறும் தடையின்றி காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

––

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us