/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீனவர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

ADDED : மார் 04, 2025 06:30 AM
ராமநாதபுரம்: ''மீனவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்,'' என, மனித நேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாரம்பரிய இடங்களில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பதுடன், அவர்களது படகுகளை பறிமுதல் செய்து நாட்டுடமை ஆக்கி வருகின்றனர். கடந்த வாரத்தில் மட்டும் 42 மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான 8 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.
இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி தங்கச்சி மடத்தில் மீனவர்கள் குடும்பத்துடன் அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் நியாயமானது.
முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு இதுதொடர்பாக பலமுறை கடிதங்கள் எழுதியும் அழுத்தமும் தந்துள்ளார்.
மத்திய அரசு தமிழக மீனவர்கள் பிரச்னையில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.