/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாயல்குடி நகர் பகுதியில் தொடரும் ஆக்கிரமிப்பு; அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கை தேவை
/
சாயல்குடி நகர் பகுதியில் தொடரும் ஆக்கிரமிப்பு; அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கை தேவை
சாயல்குடி நகர் பகுதியில் தொடரும் ஆக்கிரமிப்பு; அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கை தேவை
சாயல்குடி நகர் பகுதியில் தொடரும் ஆக்கிரமிப்பு; அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கை தேவை
ADDED : மார் 06, 2025 03:09 AM
சாயல்குடி: சாயல்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட துாத்துக்குடி -ராமநாதபுரம் செல்லும் கிழக்கு கடற்கரைச்சாலை மற்றும் அருப்புக்கோட்டை செல்லும் சாலையின் இரு புறங்களிலும் சாலையோர கடைகளின் ஆக்கிரமிப்புகள், அதிகளவு சாலையை ஆக்கிரமித்துக் கொள்ளும் செயல் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.
குறிப்பாக சனிக்கிழமையில் நடைபெறும் வாரச்சந்தை சமயங்களில் கிழக்கு கடற்கரை சாலையின் இரு புறங்களிலும் வரிசையாக வாகனங்கள் கடைகளுக்கு முன்பாக நிறுத்தப்படுகின்றன.
இதனால் கன்னியாகுமரி, நாகப்பட்டினம், ராமேஸ்வரம், துாத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறுகின்றனர்.
ரோட்டின் இரு புறங்களிலும் உள்ள கடைகளில் பொதுமக்கள் நடந்து செல்லக்கூடிய நடைபாதையில் ஆக்கிரமிப்பு கடைகள் பெருகி வருகின்றன. இதனால் ரோட்டில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்புகளின் தாக்கம் உள்ளது.
சாலையோர ஓட்டல்களின் சமையல் கூடங்கள் அதிகளவு உள்ளது.
சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் ஆட்டோ, லாரி உள்ளிட்ட வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே கடலாடி வருவாய்த் துறையினர், பேரூராட்சி நிர்வாகத்தினர், சாயல்குடி போலீசார், நெடுஞ்சாலை துறையினர் ஒன்றிணைந்து சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது கிழக்கு கடற்கரை சாலையில் புதிய சாலை அமைக்கும் பணி நடந்து வரும் நிலையில் இது போன்ற ஆக்கிரமிப்புகளை அகற்றினால் பயனுள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.