ADDED : ஜூலை 28, 2026 06:02 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் உணவக கூட்டரங்கில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை சார்பில் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி கூட்டம் நேற்று நடந்தது.
கலெக்டர் சிவகுரு பிரபாகரன் துவக்கி வைத்தார். பத்திரிகை தகவல் அலுவலக தென் மண்டல பொது இயக்குநர் பழனிசாமி முன்னிலை வகித்தார். இயக்குநர் அருண்குமார் வரவேற்றார். தொடர்ந்து மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி விகாஸ் மீன்வளத்துறையில் உள்ள மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும், ‘மை பாரத்’ இயக்குநர் செந்தில்குமார் இளைஞர்களுக்கான திட்டங்கள் குறித்தும் விளக்கினர். எஸ்.பி., சந்தீஷ் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் போலீசாரின் செயல்பாடுகள் குறித்து தெரிவித்தார். ––
