/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கச்சத்தீவால் மீனவர்களுக்கு பயனில்லை: காங்., மாநில நிர்வாகி பேட்டி
/
கச்சத்தீவால் மீனவர்களுக்கு பயனில்லை: காங்., மாநில நிர்வாகி பேட்டி
கச்சத்தீவால் மீனவர்களுக்கு பயனில்லை: காங்., மாநில நிர்வாகி பேட்டி
கச்சத்தீவால் மீனவர்களுக்கு பயனில்லை: காங்., மாநில நிர்வாகி பேட்டி
ADDED : மார் 03, 2025 06:40 AM

பரமக்குடி ; ''கச்சத்தீவால் மீனவருக்கு பெரிய பயன் இல்லை. வலை உலர வைக்க தான் பயன்படும்'' என காங்., தகவல் அறியும் உரிமை பிரிவு (ஆர்.டி.ஐ.,) மாநில தலைவர் கனகராஜ் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அவர் கூறியதாவது: இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சீமானுக்கு பாதுகாப்பு தர நினைக்கும் மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழக மீனவர்களை ஏன் காப்பாற்றவில்லை. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும்.
'வாட்ச் பேதன்' என்ற இடத்தில் அதிகமான மீன்வளம் இருக்கிறது. அதனால் 1976ல் முன்னாள் பிரதமர் இந்திரா அதை வாங்கிகொண்டு தான் இலங்கைக்கு கட்சத்தீவை கொடுத்தார்.
கச்சத்தீவால் மீனவருக்கு பெரிய பயனும் இல்லை. வெறும் வலை உலர வைக்க தான் பயன்படும். காங்., இரு மொழி கொள்கையை தான் விரும்புகிறது. எங்கள் எல்லோருக்கும் ஹிந்தி தெரியும். யார் விரும்பினாலும் படிக்கலாம். கவர்னர் ரவி பதவியை துறந்துவிட்டு, பா.ஜ.,வில் சேரப்போவதை போல் தான் பேசுகிறார். மக்கள் நலன் சார்ந்த மசோதாக்களை கிடப்பில் வைத்துள்ளார்.
அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.