/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
களரி தர்ம முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
/
களரி தர்ம முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED : செப் 05, 2024 07:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தரகோசமங்கை:- உத்தரகோசமங்கை அருகே களரி கிராமத்தில் உள்ள தர்ம முனீஸ்வரர், ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு தர்ம முனீஸ்வரர், ஆஞ்சநேயர் சுவாமி கோயில் விமான கலசத்தில் யாகசாலை பூஜைக்கு பிறகு பட்டாச்சாரியாரால் புனித நீர் ஊற்றி காலை 10:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
மூலவர்களுக்கு 16 வகை அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை களரி மற்றும் கருக்காத்தி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.