
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: கார்த்திகையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் உள்ள முருகன் கோயில்களில் அபிேஷகம், பூஜை, வழிபாடு, அன்னதானம் நடந்தது.
நேற்று சித்திரை கார்த்திகையை முன்னிட்டு பட்டணம்காத்தான் வினைதீர்க்கும் வேலவர் கோயிலில் காலையில் பால், தயிர், சந்தனம், பழங்களால் அபிேஷகம் நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயில், வழிவிடு முருகன் கோயில், முகவை ஊருணி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், குமரய்யா கோயில், வெளிப்பட்டணம் பாலசுப்பிரமணியம் சுவாமி, பாலதண்டயுதசுவாமி கோயில், கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் பாலமுருகனுக்கு அபிேஷகம் பூஜைகள் நடந்தது, அன்னதானத்தில் பக்தர்கள் பங்கேற்றனர்.