/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அம்மன் கோயிலில் கிடா வெட்டு விழா
/
அம்மன் கோயிலில் கிடா வெட்டு விழா
ADDED : மே 10, 2024 11:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சிலுகவயல் தாழை மடல் காளியம்மன் கோயிலில் கிடா வெட்டும் விழா நடந்தது. முன்னதாக நேர்த்திக் கடனாக பக்தர்கள் வழங்கிய நுாற்றுக்கும் மேற்பட்ட ஆட்டுக் கிடாய்கள் கோயில் வளாகத்தில் பலியிடப்பட்டு பக்தர்களுக்கு அசைவ விருந்து அன்னதானம் நடைபெற்றது.
முன்னதாக மூலவர் அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகை அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.