/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா
/
ராமநாதபுரம் மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா
ADDED : ஆக 27, 2024 06:23 AM

ராமநாதபுரம் : கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் பெருமாள், கண்ணன் கோயிலில் அபிேஷகம், வழிபாடுகள் நடந்தது.
ராமநாதபுரம் வெளிபட்டணம் ருக்குமணி, சத்யபாமா சமேத கிருஷ்ண பரமாத்மா கோயில், மகாசக்திநகர் பாமா, ருக்குமணி சமேத கண்ணபிரான் கோயில்களில் அபிேஷகம் அலங்காரத்தில் வழிபாடு நடந்தது. அச்சுந்தன்வயல் பாமா ருக்குமணி சமேத கண்ணன் கோயிலில் சுவாமிக்கு அபிேஷக அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது.
இதே போல இடையர்வலசை கண்ணன் கோயிலில் அபிேஷகம், அலங்காரத்தில் பூஜைகள் செய்து கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
அழகன்குளத்தில் உள்ள ராதா ருக்மணி சமேத நவநீத கிருஷ்ணன் கோயிலில் அபிேஷக அலங்காரத்தில் வழிபாடு நடந்தது. வீடுகளில் பெற்றோர் தங்களது குழந்தைக்கு கிருஷ்ணர் அலங்காரம் செய்து கோயிலுக்கு அழைத்து வந்திருந்தனர்.
*திருவாடானை அருகே புலியூர் ருக்மணி சமேத கிருஷ்ணர் கோயில் கிருஷ்ண ஜெயந்தி விழா ஆக.17 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது.
நேற்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு லட்சார்ச்சனை, உறியடி விழா, குழந்தை கண்ணன் சுவாமி ஊர்வலம் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தொண்டி உந்திபூத்தபெருமாள் கோயிலில் உள்ள கிருஷ்ணர் சன்னதியில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. கிருஷ்ணர் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். சிறப்பு தீபாராதனை நடந்தது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது.
* பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் உற்ஸவர் கிருஷ்ணன் மயில் இறகு கொண்டை அணிந்து கையில் வெண்ணெய் ஏந்தி இருந்தார். மேலும் தொட்டிலில் கிடந்த நவநீத கிருஷ்ணனை பக்தர்கள் வணங்கினர்.
தொடர்ந்து வேதாத்யயன சபை சார்பில் கிருஷ்ண யாகம் நடந்தது. இதில் காலையில் சுதர்சன ஹோமங்கள் நிறைவடைந்து அஸ்வ பூஜை நடத்தப்பட்டது. இரவு பெருமாள் சேஷ வாகனத்தில் வீதி உலா வந்து உறியடி நடந்தது.
பரமக்குடி காக்கா தோப்பு ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் காளிங்க நர்த்தன கிருஷ்ணராக அருளினார். இதே போல் பல்வேறு கிராமங்களில் உள்ள கிருஷ்ணர் கோயில்களில் உறியடிக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடத்தப்பட்டது.