/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வைகை ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில்... மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை தேவை

ADDED : ஏப் 28, 2024 05:36 AM

வைகை ஆறு ராமநாதபுரம் அருகே ஆற்றாங்கரை ஊராட்சியில் கடலில் கலக்கிறது. இந்தப்பகுதியில் அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் மீன் வளத்துறை சார்பில் சுற்றுலா தலமாக மாற்றப்படும். 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆற்றாங்கரை பேக் வாட்டர் பகுதியில் பயணிகள் சுற்றலா செல்வதற்கான படகுகள் இயக்கப்படும்.
இந்தப்பகுதியில் பூங்காக்கள் அமைத்து மக்கள் பொழுது போக்கும் பகுதியாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இத்திட்டம் செயல்படுத்த போதுமான நிதி ஆதாரம் இல்லாததாலும்தற்போதைய அரசு ஆர்வம் காட்டாததாலும் இத்திட்டம் முழுமையாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஆற்றாங்கரை பகுதிக்கு செல்லும் வழியில் அழகன்குளம் வைகை ஆற்றின் கரையில் பழங்கால மக்கள் வாழ்ந்த பகுதியாகும்.
இங்கு தொல்லியல் ஆய்வு செய்யப்பட்டு அதில் கிடைத்த பொருட்கள் அனைத்தும் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
இதுபோன்ற பகுதியில் சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட்டால் ராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்தப்பகுதிக்கு வந்து செல்வதற்கும் வாய்ப்பாக அமையும்.
தமிழக அரசு தொல்லியல் காட்சியகம் அமையவுள்ள பகுதியில் கடல் முகத்துவாரத்தில் குளம் போல் தேங்கியுள்ள பேக் வாட்டர் பகுதியை மேம்படுத்தி மீனவர்கள் படகுகளை நிறுத்தி பயன் பெறலாம்.
சுற்றுலாப் படகுகள் செல்லவும் வழி வகை செய்தால் மக்களை கவரும் சுற்றுலா தலமாக மாறும்.